Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

முதல்வர் மற்றும் தமிழக தலைவர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம்

ஈஸ்டர் பண்டிகைக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருது தெரிவித்தனர். அறிக்கை ஒன்றில், "பெரிய அளவில் தமிழ் கிறிஸ்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதை நாங்கள் கடுமையாக கண்டனம் செய்கிறோம்" என்று அவர்கள் கூறியுள்ளனர். "குண்டு வெடிப்பில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளின் ஆண்மா சாந்தியடையுவும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் வலிமையைக் கொடுக்கவும், காயமடைந்தவர்கள் விரைவாக மீட்கப்படுவதற்காகவும் நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம், "என அந்த அறிக்கை தெரிவித்தது.

150 க்கும் அதிகமானோர் உயிரிழந்து, 400 க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய இலங்கை குண்டு வெடிப்புகளை கண்டித்து மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தமிழர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், "இலங்கையில் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஏனைய சமூகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார். "தமிழர்களை மிரட்டுவதரக்காகவும், மத சிறுபான்மையினரின் மனதில் ஒரு 'நிரந்தர பயத்தை' உருவாக்கும் நோக்கதிற்காக இந்த சம்பவங்களை நிகழ்த்தும் சக்திகளை அடையாளம் கண்டு, அவர்களை தண்டிக்கவேண்டும்" என்று கூறினார்.

குண்டுவெடிப்புகள் கோழைத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் டி.டி.வி தினகரன் கூறினார். மேலும்  "இறந்து போன ஆண்மாக்ளுக்கவும், காயமடைந்தவர்களின் மீட்புக்காக நான் வேண்டுகிறேன்," என்று அவர் கூறினார். மதிமுக தலைவர் வைகோ, ஒரு அறிக்கையில், குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை கொடுக்கவேண்டுமென கோரினார் மற்றும் செயிண்ட் அந்தோனியார் சபை உட்பட சம்பவம் நடந்த வழிபாட்டுத் தலங்கள், தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது "சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை போன்ற இடங்களில்  நடந்த தாக்குதல் மனிதாபிமான சக்திகளால் முறியடிக்கப்பட வேண்டிய மனிதநேயத்துக்கு ஒரு பெரிய சவால். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், "இலங்கையில் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஏனைய சமூகங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்."

முதல்வர் மற்றும் தமிழக தலைவர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம்

  Tags :