Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

நாமக்கல் தேர்தல் 2019: இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்

திரு.சின்ராஜ் அவர்களுடன் ஸ்டாலின்

நாமக்கல் தொகுதியில் ஏப்ரல் 18 ம் தேதி  இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பொதுத் தேர்தலின் இரண்டாவது கட்டத்தில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  அ.இ.அ.தி.மு.க.வின் காளியப்பன் மற்றும் தி.மு.க.வின் ஏ.கே.பி. சிங்ராஜ் ஆகியோர் 2019 தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இறுதி முடிவு: தி.மு.க.வின் ஏ.கே.பி. சின்ராஜ், அதிமுகவின் காளியபன்னை 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2014ஆம் தேர்தல் பின்னணி: அதிமுகவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் திமுகவை சேர்ந்த காந்திசெல்வனை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் - அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணிகள் வைத்து கொண்டனர். 

அதிமுக தேர்தல் கூட்டணியை பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, NR காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைத்து தேர்தல் களத்தை சந்தித்தினர். திமுக கட்சி காங்கிரஸ், சிபிஐ, விசிக, இயுமுலீ, கொமதேக, இஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டனர். நாமக்கல் தொகுதில் சராசரியாக 74 சதவீதம் மக்கள் படிப்பறிவு கொண்டு உள்ளனர். அவற்றில் 83 சதவீதம் பேர் பெண்களும், 67 சதவீதம் பேர் ஆண்களும் உள்ளனர். 

முந்தைய தேர்தல் நிலவரம்

2014: அதிமுக கட்சியை  சேர்ந்த கட்சியின்  சுந்தரம் 5,63,272 வாக்குகளை பெற்று திமுகவின் காந்திசெல்வனை தோற்கடித்தார். காந்திசெல்வன் 2,68,898 வாக்குகளைப் பெற்றார்.

2009: தி.மு.க.வின்  காந்திசெல்வன் 3,71,476 வாக்குகளைப் பெற்றார தேர்தலில் வெற்றி பெற்றார். 2,69,045 வாக்குகளைப் பெற்ற அதிமுக கட்சியை சேர்ந்த தமிழரசி தேர்தலில் பின்தங்கினார். 

தமிழ்நாடு மாநிலத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஏழு இடங்கள் (ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், ராசிபுரம், பொள்ளாச்சி, பெரம்பலூர், தென்காசி மற்றும் நாகப்பட்டினம்) பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன.  இருப்பினும், மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.

வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு பெரும் தொகை எடுக்கப்பட்டதால்   வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தார். எனவே மொத்தம் 39 தொகுதியில் 38 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் வெளியானது. தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றது. தேனி மாவட்டத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

நாமக்கல் தேர்தல் 2019: இரண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்