Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

அடுத்த 5 ஆண்டுகளில் இழந்த இடத்தை இந்தியா மீண்டும் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வரிசை முறையில்  இந்தியாவின் உரிமையை மீட்பதற்கான நேரம்  என்று இரண்டாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி கூறினார்.

சூரத் தீ விபத்து காரணமாக, மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றதற்காக எளிய முறையில் வெற்றி கூட்டம் நடைபெற்றது. 

1942 முதல் 1947 வரையிலான காலப்பகுதியில் இந்தியா இருந்தது போலவே, வரலாற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று மோடி   கூட்டத்தில் உரையாற்றினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வரிசையில் இந்தியாவின் சரியான நிலையை மீண்டும் பெறுவதற்கான காலகட்டம் இதுவாகும். கடந்த பொறுப்பில் இருக்கும்போதே நாடு அந்த இடத்தில் இருந்தது, உலக ஒழுங்கில் இந்தியா தனது முக்கியத்துவத்தை மீண்டும் பெறுமென நம்புகிறேன் என்று மோடி கூறினார்.

சூரத் கட்டிடம் தீ விபத்தில் 22 மாணவர்கள் மரணம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்தனர்.

ஒரு பக்கம்  பாராட்டு கூட்டத்தில் பங்கேற்று கொள்ளலாமா வேண்டாமா என்ற மனநிலையோடும் மறு பக்கம் கடமையை எண்ணி, இரண்டையும் நினைத்து  குழப்பத்தில் இருந்ததாக மோடி தெரிவித்தார். 

சூரத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு கருணை கொள்வதாக கூறினார். எந்த வார்த்தைகளும் தனது குழந்தைகளை இழந்த  பெற்றோருக்கு வருத்தத்தை போக்காது என்றார். 

மறுபுறத்தில், மாநில மக்களுக்கு தனது நன்றிகளை பதிவு செய்தார். அம்மாவின் ஆசீர்வாதம் போல  கடமையை எடுத்துக்கொள்வேன் என்று நரேந்திர மோடி கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இழந்த இடத்தை இந்தியா மீண்டும் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி