Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

அமமுக தலைவர் டிடிவி தினகரன் - சசிகலா சிறையில் சந்திப்பு

டிடிவி தினகரன் - சசிகலா சந்திப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை பரப்பன அக்ராஹாரவில் உள்ள மத்திய சிறையில் அவரது அத்தை மற்றும் அதிமுக'வால் புறக்கணிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க சசிகலாவை சந்தித்து பேசினார் தினகரன்.

தற்போதைய அரசாங்கம் மற்றும் அமமுக'வின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தேர்தலாக இருப்பதால், வேட்பாளர்களின் விவாதங்களை விரிவாக விவாதிப்பதுடன் தேர்தலில் வெற்றி பெற திட்டங்கள் செய்து இந்த சந்திப்பு அரைமணிநேரம் நீடித்தது.

ஜெயலலிதாவின் இடத்திற்கு சரியான உரிமையாளர்களாக இரு தரப்பினரும் எதிரே நிற்பதால் தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்துவிட்டது. வரும் தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால். ஆட்சியில் மாற்றம் வரும் வாய்ப்புள்ளது என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த பதட்டமான சூழ்நிலையில், கடந்த சில நாட்களில் சசிகலா மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், அவரது மருமகனுடன் வேட்பாளரைப் பற்றி ஆலோசிக்க காத்திருந்ததாகவும் சிரிநிர்வாகி ஒருவர் தெரிவித்தனர்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் - சசிகலா சிறையில் சந்திப்பு