செப்டம்பர் 15 முதல் UPI யில் வரும் புதிய விதிமுறைகள்
ராம் குமார் (Author) Published Date : Sep 13, 2025 12:34 ISTஇந்தியா
யுபிஐ (UPI) பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இவ்வளவு நாட்களாக ஒரு நாள் பரிவர்த்தனை வரம்பு முடிந்துவிட்டது என்று பலர் உணர்ந்திருப்போம். அந்தக் கவலையைப் போக்கும் விதமாக, தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) யுபிஐ பரிவர்த்தனையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இனிமேல், நீங்கள் இஎம்ஐ (EMI) கடன் கட்ட வேண்டும் என்றால், ஒரு பரிவர்த்தனையில் 5 லட்சம் வரையிலும், ஒரு நாளுக்கு 10 லட்சம் வரையிலும் பணம் செலுத்த முடியும். அதேபோல, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு பரிவர்த்தனையில் 5 லட்சம் வரையிலும், ஒரு நாளுக்கு 10 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். மேலும், நகை வாங்குவதற்கு இனிமேல் ஒரு பரிவர்த்தனையில் 2 லட்சம் வரையிலும், ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 6 லட்சம் வரையிலும் பணம் செலுத்த முடியும்.
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வரவிருக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக NPCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தனி நபருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், அதாவது உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், ஏற்கனவே இருந்த பழைய விதிமுறையே பின்பற்றப்படும். அதாவது ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். இதில் எந்த மாற்றமும் இல்லை.