Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

திருவானந்தபுர வனத்துறையினர் 64 லட்ச மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

உலக சுற்றுசூழல் தினம்

ஜூன் 5 ஆனா நாளைய தினத்தில் திருவானந்தபுர வனத்துறையினர் 64 லட்ச மரக்கன்றுகளை நடவிருக்கின்றனர். சுமார் 100 மரப்பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த மர கன்றுகளை மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மத்தியில் விநியோகிக்கப்படுகின்றன.

83 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யவிருக்கின்றன. அவற்றில் 23 லட்ச மரக்கன்றுகள் பழம் கொடுப்பவையாகவும், 11 லட்ச கன்றுகள் மர வகையாகவும், 10 லட்சம் கன்றுகள் மருத்துவ குணம் கொண்டதாகவும்,    6.75 லட்ச கன்றுகள் அலங்கார தாவிரங்களையும், 7.6 லட்ச கன்றுகள் கரை ஓரம் மற்றும் ஆற்று ஓரங்களை பாதுகாக்க நடவு செய்யப்படவுள்ளன.

இது தவிர, பல்வேறு அரசு அலுவலகங்கள் காலியாக உள்ள நிலங்களில் 3.2 லட்சம் மரங்களை நடவு செய்யவுள்ளனர். மலப்புரத்தில் பொள்ளாணி கடற்கரையில் 14,000 சவுக்கு மரங்கள் நடவு செய்கின்றனர். கடற்கரை அகாடமி ஏழமலையில் உள்ள கடல் ஓரங்களில் 30 சவுக்கு மரங்கள் நடவுள்ளன.

வனத்துறை அமைச்சர் கே. ராஜு, அரசாங்கம் நடவு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாது, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. 2016 - 17 காலகட்டத்தில் 55 சதவீத கன்றுகளும், 2017 - 18 காலகட்டத்தில் 63 சதவீத கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 -17 காட்டிலும் 17 - 18 காலகட்டத்தில் நடவு சதவீதம் பெருகியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். 

மாநில அளவில் விழா 

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநில அளவிலான சுற்றுச்சூழல் தின விழா, மாலை 3 மணியளவில் வனத் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் மேலும் விழாவினை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்குகிறார்.  விழாவுக்கு முன்னர், முதல்வர் மற்றும் வனத்துறை அமைச்சர் வனத் தலைமை அலுவலக இடங்களில் நடவு செய்கின்றனர். முதலமைச்சர் ஒரு பல்லுயிர் மரபு மையத்தை அமைப்பதின் தகவலை அறிவிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல்வேறு விருதுகளை விநியோகிப்பார். வணமித்ரா, பரிசித்திமித்ரா, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மீடியா விருதுகள் போன்றவற்றை வழங்கவுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் சிறப்புரை ஆற்ற உள்ளார். நாளை காலை 7 மணியளவில் பசுமை மாராத்தான் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளை வன மற்றும் வனவிலங்குத் துறையினரும், கேரள மாநில பல்லுயிர் சபை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையினரால் இணைந்து நடத்தப்படுகின்றன. சுற்றுசூழல் தினத்தையொட்டி சூழலை பாதுக்காக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். 

திருவானந்தபுர வனத்துறையினர் 64 லட்ச மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு