ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்
ராம் குமார் (Author) Published Date : Sep 08, 2025 18:01 ISTஇந்தியா
சென்னை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, தமிழக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இனி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் டெட் (TET - Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் கட்டாயம் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் அல்லது விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற 60% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு, ஆசிரியர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.