Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஸ்பைஸ்ஜெட்டின் மான்சூன் சேல்: ஜூலை 2 முதல் 6 வரை பதிவுகள் நடைபெறும்

ஸ்பைஸ்ஜெட்டின் மான்சூன் சேல்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பயணிகளுக்காக மான்சூன் சேல் என்ற சலுகையை வழங்கியுள்ளது. உள்நாட்டு பயணிகளுக்கு கட்டண விலையாக 888 ரூபாயும், சர்வதேச பயணிகளுக்கு கட்டண தொகையாக 3499 ரூபாயும் நிர்ணயித்து உள்ளது. மான்சூன் சேல்க்கான பதிவு நேற்றய தினம் தொடங்கி ஜூலை 6 அன்று முடிவடைகிறது. இந்த பதிவுகள் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை பயணத்திற்கு செல்லுபடியாகும் என்று நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மான்சூன் விற்பனை கீழ் சீட்டுகளின் எண்ணிக்கையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிடவில்லை. 

ஸ்பைஸ்ஜெட்டின் மான்சூன் சேல் பதிவுகளை அனைத்து ஆன்லைன் பதிவு தளங்களில் இருந்து முன்பதிவுகள் செய்து கொள்ளலாம். மேலும்  ஸ்பைஸ்ஜெட்.காம் மூலம் பதிவுகள் செய்தால் உணவு, இருக்கைகள் மற்றும் ஸ்பைஸ்மேக்ஸ் ஆகியவற்றில் 25%  தள்ளுபடி பிரத்யேக சலுகைகளாக பெற இயலும். 

இச்சலுகை ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த சலுடையுடன் வேறு எந்த சலுகையும் இணைக்க முடியாது எனவும் குழு முன்பதிவுகள் செய்யக்கூடாது என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்  குறிப்பிட்டது. பருவமழை பொதுவாக இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு ஒரு சறுக்கல் தரும் பருவமாகும், மேலும் பல விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க லாபகரமான சலுகைகளைக் அறிவிப்பார். 

ஸ்பைஸ்ஜெட் ஜூலை 1 முதல் குவஹாத்தி-டாக்கா-குவஹாத்தி விமான சேவையை தொடங்கி உள்ளது. இந்த மாதத்திலிருந்து மும்பை மற்றும் டெல்லியில் இருந்து 8 புதிய தினசரி சர்வதேச விமானங்களையும் தொடங்கவுள்ளது. 

மே மாதத்தில் ஸ்பைஸ்ஜெட் உள்நாட்டு பயன சேவைகளில் இரண்டாவது இடத்தை பெற்றது. 18.03 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் உள்நாட்டு சந்தை பங்கில் 14.8% ஆகவும், ஏர் இந்தியா 16.53 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது, 13.5% உள்நாட்டு சந்தை பங்கையும் பெற்றுள்ளன. 

ஸ்பைஸ்ஜெட்டின் மான்சூன் சேல்: ஜூலை 2 முதல் 6 வரை பதிவுகள் நடைபெறும்