SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் எளிமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல், ஒவ்வொரு வங்கி சேவைக்கும் தனித்தனியாக KYC விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

SBI வங்கியின் தலைவர் சி.எஸ். செட்டி அவர்கள் தெரிவித்ததன் படி, வங்கி சேவைகளுக்காக ஒரு வாடிக்கையாளர் ஒரு முறை மட்டும் தனது KYC விவரங்களை அளித்தால் போதும். நீங்கள் வங்கி கணக்கு திறப்பது, வீட்டுக் கடன் அல்லது பிற சேவைகளுக்கு விண்ணப்பிப்பது என எந்தச் சேவைக்குச் சென்றாலும், முதல் முறை சமர்ப்பித்த அதே KYC விவரங்களை வங்கி பயன்படுத்திக் கொள்ளும்.

தற்போது SBI யில் மட்டும் சுமார் 15 வெவ்வேறு KYC நடைமுறைகள் இருப்பதாக சி.எஸ். செட்டி கூறியுள்ளார். இதனால் வாடிக்கையாளர்களின் நேரமும், வங்கியின் வேலையும் அதிகரிக்கிறது. இந்த புதிய ஒற்றை KYC நடைமுறையால், SBI வாடிக்கையாளர்களின் வேலையும் நேரமும் மிச்சமாகும் மற்றும் வங்கி நடைமுறைகள் எளிமையாகும்.

இந்த சாரல் திட்டத்தின் கீழ், இந்த ஒற்றை KYC நடைமுறையை 2026 மார்ச் மாதத்திற்குள் (2025-26 நிதியாண்டின் இறுதிக்குள்) அறிமுகப்படுத்த வங்கி திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாரல் திட்டத்தின் கீழ் KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படுவது, SBI வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on:

Latest Post