ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

RBI Officers Press Meeting
RBI Officers Press Meeting

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள சேமிப்புக் கணக்குகள் குறித்து சில விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பல வங்கி கணக்குகள் வைத்திருப்போர், அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், அவை முடக்கப்படும் அபாயம் உள்ளது.

நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்

1) ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எந்தவிதமான பணப் பரிமாற்றமோ அல்லது நடவடிக்கையோ நடைபெறவில்லை என்றால், அந்த கணக்கு செயலற்ற கணக்கு (Inactive) என்று கருதப்படும்.

2) ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றால், அது செயல்படாத கணக்கு (Dormant) என்று வகைப்படுத்தப்பட்டு, தற்காலிகமாக முடக்கப்படும்.

3) குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கோரும் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகள், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல், அதில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காவிட்டாலோ அல்லது பூஜ்ஜிய இருப்பில் இருந்தாலோ, வங்கிகள் அவற்றையும் மூடுவதற்கு அல்லது முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

உங்கள் கணக்கு முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ₹100 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய தொகையை பணப் பரிமாற்றம் (Transaction) செய்வது, பணம் எடுப்பது அல்லது பணம் டெபாசிட் (Deposit) செய்வது போன்ற ஏதாவது ஒரு சிறிய நடவடிக்கையை குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.

Latest Post