Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

Neet Exam 2019: நீட் தேர்வுக்கு காலை முதல் கூடத்தொடங்கிய மாணவர்கள்

காலை ஏழு மணிமுதல் காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இன்று மதியம் இரண்டு மணிக்கு நடக்க இருக்கும் நீட் தேர்விற்காக மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் கூட தொடங்கியுள்ளனர். இந்தியா முழுக்க நடக்க இருக்கும் நீட் தேர்வு இன்று தொடங்குகிறது. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் தேர்வு பாணி புயல் காரணத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள அரசியல் சூழலும் நீட் தேர்வை மையப்படுத்தியே உள்ளது.

குறிப்பிட்ட பள்ளிகளுக்கு நீட் தேர்வுகளை நடத்த பள்ளி கல்வி துறை ஒதிக்கியதை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முன் எச்சாரிக்கை ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. காலை ஏழு மணிமுதல் காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வுகள் நடக்கும் நிலையில் சில மாணவர்களுக்கு இன்னும் சரிவர தேவையான ஆவணங்கள் எடுத்துவர குழம்புகிறார்கள். பள்ளி ஆவணங்கள் மற்றும் மதிப்பெண் பிரதிகள் எத்தனை தேவைப்படுகிறது மற்றும், போதுமான ஆவணங்கள் சரிபார்ப்பதில் இன்றளவும் குழப்பமாகவே உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றர்.

அரசு நீட் தேர்வு எலுதும் மாணவர்களுக்கு, தேர்வுவிற்கு செல்லும் முன் தேவையான பிரதிகளை சரிபார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவது மட்டுமில்லாமல், பிரதிகள் எடுக்கவும் இலவசமாக உதவிட வேண்டும் என்பது பெருவாரியான பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் மாணவர்கள் யாரும் தேர்வுகளை எழுதாமல் போவதற்கு வாய்ப்பு இருக்காது.

பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக இருக்கும் காவலர்கள் மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வது, மற்ற மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து, தவிக்கும் மாணவர்களுக்கு உதவுவது முகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Neet Exam 2019: நீட் தேர்வுக்கு காலை முதல் கூடத்தொடங்கிய மாணவர்கள்