தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய ஜனவரி 10 தேதி வரை நீட்டிப்பு
ஏப்ரல் 2019 - மார்ச் 20ம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்தும் கடைசி நாள் 31-டிசம்பர்-2020 ஆகி இருந்தது. பல தரப்பினருடன் இருந்து கால அவகாசம் கோரிக்கை வந்ததால்,...
ஏப்ரல் 2019 - மார்ச் 20ம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்தும் கடைசி நாள் 31-டிசம்பர்-2020 ஆகி இருந்தது. பல தரப்பினருடன் இருந்து கால அவகாசம் கோரிக்கை வந்ததால், ஜனவரி பத்தாம் தேதி 2021 வரை தனிநபர் வரி செலுத்தும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணத்தினால் பல அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தது மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல நிறுவனங்களால் சரியான நேரத்தில் வருமான வர தாக்கல் செய்யமுடியவில்லை, இதே நிலை தனிநபருக்கும் இருந்தது. நிறுவனங்களுக்கான கால நீட்டிப்பு பிப்ரவரி 15 2021 தேதி வரை உள்ளது.
இந்த வருடம் இது வரை மூன்றாவது நீட்டிப்பாகும். தனிநபர்கள் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், ஜனவரி 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்து அபராத தொகையை செலுத்தாமல் பார்த்துக்கொள்ளவும்.