Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கோயம்புத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் கைது

கோயம்புத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் கைது

கோயம்புத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் கைது: கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த கள்ள நோட்டு கும்பலை, போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சரவணம்பட்டி பகுதியில் இவர்கள் ரூ. 2000, ரூ. 500, ரூ. 200, ரூ. 100 மற்றும் ரூ. 50 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதற்கு முன்னதாகவே போலீசார் கைது செய்தது சிறப்பு.

இவர்கள் எந்த ஒரு அதிநவீன தொழில் நுட்பங்களை உபயோக படுத்திவில்லை என்பதே இதில் ஆச்சரியம். சாதாரண கணினி மூலம் இயங்கும் இன்க்ஜெட் பிரிண்டர் உதவியுடன், A4 தாளில் கலர் பிரிண்ட் எடுத்து, கட்சிதமாக வெட்டி உள்ளனர். போலி மற்றும் உண்மையான பண நோட்டுகளை அடையாளம் காண்பது கடினம்.

இந்த கும்பலில் கிடார் முகமது, மகேந்திரன் மற்றும் சூரியகுமார் என அழைக்கப்படும் மூன்று நபர்களையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்த டெஸ்க்டாப் இன்க்ஜெட் பிரிண்டர் மற்றும் லேமினேஷன் இயந்திரத்துடன் கைப்பற்றப்பட்ட 3 லட்சத்திற்கு மேலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

உதவி கமிஷனர் எம். பாஸ்கரன் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வருவதற்கு முன்பே கைது செய்துள்ளதால், ஏமாற இருந்த அப்பாவி மக்கள் தப்பித்துள்ளனர். மேலும், கள்ள நோட்டுகளை பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தமக்கு முன்பின் தெரியாத ஒரு நபரிடம் எந்த ஒரு சூழ்நிலையிலும், சில்லறைக்காக அல்லது எந்த ஒரு பண பரிமாற்றம் செய்வது ஆபத்தானது.

ஒருவேளை இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருந்தாள், நோட்டுகள் புழங்குமிடம் , பெட்ரோல் பங்குகள், சாப்பிடும் ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் சிறு தொழில் செய்யும் வணிகர்களிடம் இவர்களின் கள்ள நோட்டுக்குள் புழக்கத்தில் இருக்கும். இவர்கள் யாரும் கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் கருவிகளை வைத்திருக்க வாய்ப்பு குறைவு.

இவர்கள், இது கள்ள நோட்டு என்று தெரியாமல், வங்கிகளில் செலுத்த முயன்றால் வங்கி அதிகாரிகள் இந்த கள்ள நோட்டுகளை இவர்கள் கண்முன்னே கிழித்து, இது கள்ள நோட்டு என்று கூறுவார்கள். இவ்வாறு நடந்தால், இவர்களின் தொழில் மிகவும் பாதிப்படையும்.

கோயம்புத்தூரில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் கைது