இந்தியா

சென்னை, கோவை, மதுரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.04.2020) முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கிராமப்புறத்தில் இந்த நோய்...

By புருசோத்தமன் · ·1 min read

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.04.2020) முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கிராமப்புறத்தில் இந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நகரங்களில் இன்னும் சிறிது கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

இதனால் கொரோனா நோய் அதிகம் உள்ள மூன்று முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு நான்கு நாட்களுக்கு அமல்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார், அந்த மூன்று நகரங்கள் சென்னை, கோவை மற்றும் மதுரை. இந்த நகரங்களில் மட்டும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல், ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இவை மூன்று நகரங்களுக்கு பின் இருக்கும் இரண்டு நகரங்கள் சேலம் மற்றும் திருப்பூர், இங்கு மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஏப்ரல் 26 காலை 6 மணி முதல், ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த குறிப்பிட்ட முழு ஊரடங்கில் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


View full article on தமிழ் செய்திகள்