Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும்

கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களில் தமிழகம்

சுகாதார அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் நேற்று, மார்ச் 11 காலை பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய செய்தி, தமிழகம் இப்போது கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம். ஓமானில் இருந்து வந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அறிந்து சிகிச்சை அளித்து  வந்தனர். இவரை தனிமை படுத்தி தீவிர சிகிச்சைக்கு பின், இவர்க்கு கொரோன வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்தில் அவருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களின் இரத்த மாதிரிகள் இப்போது எதிர்மறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா வைரஸ் தொற்று எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும்.

கொரோனா வைரஸ் உலகளவில் 4000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று உள்ளது, மற்றும் 1,10,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது எண்ணிக்கை 62 ஆக உள்ளது, ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இதுவரை எந்த மரணமும் இல்லை.

பெங்களூருவை சேர்ந்த 76 வயது மிக்க ஒருவர் இறந்துள்ளார் ஆனால் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார் என்பதை கர்நாடக அரசு உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும்