Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவர்கள் அவர்களுடைய படிப்பை முடித்துவிட்டு, அல்லது நடுவில் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறுவதற்கு, உயர் படிப்புகளில் சேருவதற்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது அவர்களுக்கு TC (மாற்றுச்சான்றிதழ்) தரப்படுகிறது. அந்த மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட மாணவனின் பெயர், சாதி, மதம், தேர்ச்சி பெற சரியானவரா, மாணவனின் நன்னடத்தை சான்று என பல்வேறு விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் மாணவர்களின் சாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று தற்பொழுது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலமாக மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பழக்கம் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை சார்பில் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் மாற்று சான்றிதழில் மாணவர் எந்த சாதியை சார்ந்தவர் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மாற்று சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் வருவாய்த்துறை வழங்கும் சாதி சான்றிதழை ஏற்கவும் என்று மட்டுமே குறிப்பிடவேண்டும். மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை அல்லது சமயம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழை வழங்கவேண்டும்.

மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ சாதி தொடர்பான பத்தியை நிரப்பவேண்டாம் என்று கேட்டிக்கொண்டால், அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை வழங்கலாம். இதற்கான அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவித்து, வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையதளம் மூலமாக மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக பள்ளி கல்வி இயக்குனர் திரு.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு