Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

அம்மா மினி கிளினிக் திட்டம், மக்களின் வரவேற்பும் ஆதரவும்.

அம்மா மினி கிளினிக் திட்டம் 2020

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி எந்த நேரத்திலும் விரைவாக கிடைத்திட "அம்மா மினி கிளினிக்" திட்டத்தை (18-12-2020) தொடங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து மிக பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

மறைந்த முன்னால் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் "அம்மா மினி கிளினிக்".

இந்த வருட தொடக்கத்தில் கொடிய வைரஸ் நோயான கொரோனாவின் தாக்கம் உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டது. நோய் தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து, தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு  மிக சாதுர்யமாக செயல்பட்டதால், தொற்று ஆரம்பித்த முதல் மாதத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்தார்.

இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை "மருத்துவம், துப்பரவு, காவல், அரசு பணியாளர்கள், மேலும் பல துறையை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சர் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இவ்வாறு செயல்பட்ட முதல்வர், பின்வரும் காலங்களில் ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக இருந்திட மற்றும் எந்த நேரத்திலும் மருத்துவ உதவிகள் "அரசு மருத்துவமனைகள் தூரமாக இருக்கும் பட்சத்தில்" உதவும் நோக்கத்துடன் "அம்மா மினி கிளினிக்" திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.

கொரோனா காலத்தில், முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அமைத்திருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பாதுகாப்பு-நிம்மதியும் கிடைத்த தருணத்தில், இது போன்ற மினி கிளினிக் தமிழகமெங்கிலும் தொடங்குவதால் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக மக்களிடம் இருந்து வரும் வரவேற்பிலும் ஆதரவிலும் தெரிகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மாவட்டத்தில் வேடப்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் டாக்டர் RCM. விஷ்ணு பிரபு அவர்கள் கழக நிர்வாகிகள் பலர் கொண்டனர்.

அம்மா மினி கிளினிக் திட்டம், மக்களின் வரவேற்பும் ஆதரவும்.