Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கொரோனா வைரஸ் எதிரொலி, அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி கிடையாது

கொரோனா வைரஸ் எதிரொளி, அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி கிடையாது

கொரோனா வைரஸ் எதிரொலி, அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி கிடையாது: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அமெரிக்கர்களை பாதுகாக்கவும் மற்றும் அமெரிக்காவில் நோய் வராமல் தடுக்கவும், அமெரிக்கா புதிய தடையை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று வரை, கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 360 எட்டியுள்ளது.

சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ், வேகமாக பிற இடங்களில் பரவுவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் உள்ள மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதால், அந்நாட்டு அரசாங்கம் பல வகையான பாதுகாப்பு முயற்ச்சியும், வெளிநாட்டவர் உள்ளே வராமல் இருக்க தடைகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய தடையினால், அமெரிக்காவில் இருந்து யாரும் சீனா செல்ல முடியாது மற்றும் சீனாவில் இருந்து யாரும் அமெரிக்கா வருவதற்கு அனுமதியும் இல்லை. அமெரிக்கா குடியுரிமை பெற்றவர்கள் தகுந்த முன்னறிவிப்பின் மூலமாக அமெரிக்காவிற்கு திரும்பலாம் ஆனால் அவர்களை தனிமை படுத்தி, கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என கண்டறியப்பட்ட பின் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

வுஹன் கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவின் தற்போதைய நிலை

இந்த தடை சட்டம், அமெரிக்காவில் மட்டுமில்லாமல் சில நாடுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா அரசாங்கமும் இந்த தடையை அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் , உலகச் சுகாதார மையம் "உலகளாவிய சுகாதார அவசர நிலையை" நிலவுவதாக அறிவித்ததுதான்.

கொரோனா வைரஸ் எதிரொலி, அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி கிடையாது