Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சென்னையில் 45 வயது ஆண் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் 45 வயது ஆண் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு: இன்று ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயதுமிக்க நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவரை தனிமை படுத்தப்பட்டு தீவர கண்காணிப்பில் இருக்கிறார். இவரை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு தனியாக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில், முழுநேர கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துளளார்.

கொரோனா வைரசால் பாதிப்படைந்த நபர் நலமாக உள்ளதாகவும், இவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் அளவிற்கு தயார் நிலையில் உள்ளதால், மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் மற்றும் தேவை இல்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல மாதங்களாக கொரோனா வைரஸ் இந்தியாவில் வராமல் இருந்தது, ஆனால் இந்த மார்ச் மாதத்தில் இருந்த டெல்லி, தெலுங்கானா மற்றும் திருச்சியில் பரவியது. இன்றைய கணக்கின் படி, 30 பேர்க்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்திய நிலையில், இன்று சென்னையில் வந்துள்ளதால், இன்னும் அதிகரிக்கும் பயம் மக்கள் மத்தியில் பரவ தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் உயிர் கொல்லி நோய் அல்ல, கட்டுப்படுத்த கூடிய நோய் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் நோயால் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து உள்ளனர் என்பதை மக்கள் மனதில் கொள்ளவேண்டும்.

சென்னையில் 45 வயது ஆண் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு