Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய 4 வழிகள் இதோ

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய 4 வழிகள்

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய 4 வழிகள். ஃபிட்னெஸ், எல்லோருக்கும் இந்த கேள்விக்கான பதிலை  தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அதனை யவராலும் உண்மையில் கணிக்க முடியாது.  நம் தினசரி வாழ்க்கையில் நாம் ஒரு சில நடவடிக்கைகள் செய்ய முடியுமானால், நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  அந்த நான்கு நடவடிக்கைகள் வரும் பத்தியில் காணலாம். 

ஒற்றை காலில் நின்றல்

சற்று கேளிக்கை தரும் செயலாக இருந்தாலும், ஒற்றை காலில் நீண்ட நேரம் சமநிலை கொண்டு நின்றால் நமது மூளை ஆரோகியமாக இருப்பதை அறிந்து கொள்ள இயலும். முழு உடல் எடையும் 60 விநாடிகளுக்கு ஒரு காலில் சமப்படுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும். 20 நொடிகளுக்கு பிறகு வீழ நேர்ந்தால் மூளை சம்மந்தமான பிரச்சனைகள் வளர்ப்பதற்கான அபாயத்தில் இருப்பதை கணித்து கொள்ளலாம். ஜப்பானியர்களின் ஆய்வுப்படி, 30 சதவீத பெரியவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் சமநிலைப்படுத்தி நிற்க முடியவில்லை என்றால் மூளையில் நுண்ணிய ரத்தப்போக்கு கொண்டிருக்கும் என தெரிவித்தனர். இந்த நுண்ணிய இரத்தப்போக்கு உண்மையில் எதிர்காலத்தில் பெரிய மூளை தொடர்பான பிரச்சினைகள் வளர்வதை குறிக்கிறது. இந்த நுண்ணிய இரத்தப்போக்கு நேரடியாக  சமநிலையை உருகுழைக்கின்றது. 

நாற்காலி சோதனை

நாற்காலியில் உட்கார்ந்து பின்பு நிற்கவும்.  இதை 10 முறை மீண்டும் மீண்டும் செய்து அந்த பணியை முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கின்றது என்பதையும் குறிக்க வேண்டும். லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் 21 நொடிகள் அதற்கு குறைவான நொடிகளில் 10 முறை செய்து முடித்த மக்கள் அதை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட மக்களுடன் ஒப்பிடும்போது குறைந்த நேரம் எடுத்து கொண்ட மக்கள் அதிக ஆயுளை பெற்றுள்ளனர் என்று கூறுகின்றனர். இந்த பணியை முடிக்க,  குறைந்த உடல் தசை வலிமை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு, மற்றும் இதயத்திற்கான சுவாச உடற்பயிற்சிகள்  மேற்கொள்ள வேண்டும்.

கால் விரல்களை தொடுவது

தரையில் உட்கார்ந்து, கால்கள் நேராக தரையில் நீட்டி  கால்விரல்களை தொடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  இந்த பரிசோதனையை முடிக்க தவறிவிட்டால்,  இதய பிரச்சினைகள் வளரும் அபாயத்தில் இருப்பதாக யூகித்து கொள்ள இயலும். வட டெக்சாசில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வளயத்தக்க உடல் இருக்குமானால் வளையும் தன்மை கொண்ட தமனிகள் இருப்பதை நெகிழ்வான உடல் நெகிழ்வான தமனிகளைக் குறிக்கலாம் என்று என்று கண்டுபிடித்துள்ளனர். நமது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் அல்லது செயலற்ற தன்மை காரணமாக தமனிகள் கடினமானதாக இருக்கும்போது, ​​இரத்தத்தை உறிஞ்சுவதற்கு கடினமாக இதயம் உழைக்க வேண்டும், இது இதய நோய் வரவிருப்பதை காட்டுகின்றது.

படியேறுதல்

கலீஸியாவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை  ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்  இடைநிறுத்தப்படாமால் 12 அல்லது 13 படிகள் ஒரு இடைநிறுத்தம் இல்லாமல் ஏற முடிந்தால் ஆரம்ப மரணத்தைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான மக்கள் இந்த பயிற்சியை இடைவெளி இல்லாமல் 1 நிமிடத்தில் முடிக்க  இயலும். பணியை முடிக்க போராடும் மக்கள் மூன்று பங்கு இதய நோயாலும் இரண்டு பங்கு புற்றுநோய் காரணமாக மரணத்தை சந்திக்க நேரிடும் என்று கூறுகின்றனர். 

மக்கள் தங்கள் நலனை மேம்படுத்த சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாறி வரும் உணவு முறைகளும் வாழ்க்கை முறையும் உடலுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இவற்றை தவிர்க்க யோகா, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டால் நலத்தை பேணி காக்க முடியும்.

ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய 4 வழிகள் இதோ