Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ் திரை படம்: நீங்கள் அறியப்படாத சில வியக்கும் ரகசியங்கள்

எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ்

எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ்:

உலகமெங்கும் வரவிருக்கும் எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ் திரைப்படம், பல ஆண்டுகள் பழமையான எக்ஸ் மென் தொடரை முடிவுக்கு கொண்டுவரும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. எக்ஸ் மென் யூனிவெர்ஸ்க்கு உலகெங்கும் ரசிகர் கூட்டம் இருப்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் எக்ஸ் மென் படங்களில் நீங்கள் அறியப்படாத சில வியக்கும் ரகசியங்களை இங்கு காண்போம்.

எக்ஸ் மெனின் முதல் கதை 1984இல் எழுதப்பட்டது:

எக்ஸ்மென் கதை பதிப்புகள் பிரபலமாக இருந்த சமயத்தில் எழுத்தாளர்கள் ஜெர்ரி காண்வே மற்றும் ராய் தாமஸ் ஓரியன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தங்கள் முதல் திரைக்கதையை எழுதினர். அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கல் வந்ததால் படவேலை நிறுத்தப்பட்டது.

மார்வெல் நிறுவன தலைவர் கெவின் ஃபீஜ் கௌரவ தோற்றம்:

உலகின் மிகப்பெரிய திரைஉலகமான மார்வெலின் தலைவர் கெவின் ஃபீஜ் எக்ஸ் மென் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வுல்வரின் பாத்திரத்தின் கை நகம் ஆயுத்தத்தை ஒரு இயந்திரத்தில் இருந்து எடுக்கும் ஆளாக தோன்றியிருந்தார். அக்காட்சியில் அவரது தலை முதல் கால் வரை அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண இயலாது.

வுல்வரின் கதாபாத்திரத்திற்கு ஹக் ஜாக்மேன் வந்த கதை:

தற்போது வுல்வரின் பாத்திரத்திற்கு வேறு நடிகர் என்றால் ஒருவரும் கற்பனை செய்ய முடியாது அந்த அளவிற்கு பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார் ஜாக்மேன். படத்திற்கு வேறு பல நடிகர்கள் வுல்வரீனாக நடிக்கவிருந்த நிலையில் படம் தொடங்கும் இரண்டு வாரம் முன்பே ஹக் ஜாக்மேன் தேர்வு செய்யப்பட்டார்.

இரு ஜஸ்டிஸ் லீக் இயக்குனர்கள் "எக்ஸ் மென் லாஸ்ட் ஸ்டாண்ட்" வாய்ப்பை நிராகரித்துள்ளனர்: 

இயக்குனர் ஜோஸ் வ்ஹெட்டொன் அன்று எக்ஸ் மென் லாஸ்ட் ஸ்டாண்ட் படத்தை இயக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்தார். அதே போல இயக்குனர் சாக் சனிடேர் என்பவரும் இயக்க மறுத்தார். இருவரும் சமீத்தில் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்தை இயக்கினவர்கள் ஆவர்.

போஸ்ட் கிரெடிட் ட்ரெண்டை உருவாக்கிய எக்ஸ் - மென் த லாஸ்ட் ஸ்டேண்ட்:

தற்போது சூப்பர்ஹீரோ படங்களின் ஒரு முக்கிய அங்கமான போஸ்ட் கிரெடிட் காட்சி, முதல் முதலில் தொடங்கியது எக்ஸ் மென் லாஸ்ட் ஸ்டாண்ட் படத்தில் தான். இதில் ப்ரோபஸ்ஸர் எக்ஸ் இறப்பிற்கு பிறகு மீண்டு வருமாறு காட்டிய காட்சியே முதல் போஸ்ட் கிரெடிட் காட்சியாகும்.

ஜனவரி ஜோன்ஸ்க்கு எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸ் ஒரு பீரியட் படம் என்பது தெரியாது:

எக்ஸ்மென் பர்ஸ்ட் கிளாஸ் படம் ஒரு பீரியட் படம் என்ற செய்தியை அறியாமலேயே ஜனவரி ஜோன்ஸ் அந்த படத்தில் நடித்தார் என்பது ஆச்சரியமே.

எக்ஸ்மென் பர்ஸ்ட் கிளாசில் மக்னெட்டோ பெயர் தவறாக எழுதப்பட்ட கதை: மக்னெட்டோ எக்ஸ்மெனின் ஒரு ஸ்பெஷலான கதாபாத்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தில் ஆங்கிலத்தில் லென்ஷர் என குறிப்பிட்டுள்ளது அனால் கதை புத்தகத்தில் பெயர் ல்ஹன்ஷெர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்மேன் ஸ்பைடர்மேன் க்ராஸ் ஓவர் கதை: அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தை பார்த்தவர்கள் அதில் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சியை மறக்கமுடியாது. படத்தில் எக்ஸ்மெனில் வரும் காட்சியை காட்டிய காரணம் அப்படத்தின் இயக்குனர் மார்க் வெப்பின் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸுடனான ஒப்பந்தம் காரணமாக இது எக்ஸ்மேன் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டது.

எக்ஸ்மென் டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் படத்தின் ஸ்பின்னாப் ரயில்: எக்ஸ்மென் டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் படத்தின் விளம்பர வேலைகளின் போது ஒரு நிறுவனம் ஸ்பெஷல் ஸ்பின்னாப் ரயிலை நிறுவியது. அது இன்னும் அதே இடத்தில் காணலாம்.

எக்ஸ்மென் படத்திற்காக தேவையில்லையென்றாலும் தலை முடியை வலித்த ஜேம்ஸ் மெக்கவோய்: பிரஸ்ட் கிளாஸ் படம் தொடங்கும் முன்பே அவசியம் இல்லை என்றாலும் படத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ப்ரோபஸ்ஸர் எக்ஸ் பாத்திரத்திற்காக தன தலை முடியை வலித்தார் நடிகர் ஜேம்ஸ் மெக்கவோய்.

எக்ஸ் மென் டார்க் பீனிக்ஸ் திரை படம்: நீங்கள் அறியப்படாத சில வியக்கும் ரகசியங்கள்