Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வால்டர் வெற்றிவேல் போல இருக்குமா சிபியின் வால்டர் திரைப்படம்?

சிபியின் வால்டர் திரைப்படம்

வால்டர் வெற்றிவேல் போல இருக்குமா சிபியின் வால்டர் திரைப்படம்? மார்ச் 13, வெள்ளிக்கிழமை வால்டர் திரைப்படம் வெளிவருவதை வால்டர்  படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. வால்டர் திரைப்படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது சிபி சத்யராஜ் ஒரு சிறந்த நடிப்பைக் கொடுத்ததாகத் தெரிகிறது, மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனது தந்தையைப் போலவே நன்றாகப் பேசினார்.

அறிமுக இயக்குனர் அன்பு வால்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், தர்மம் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 11 : 11 தயாரிப்பு நிறுவனம் இந்த வால்டர் படத்தை தயாரித்துள்ளது. சன் டிவி செயற்கைக்கோள் உரிமையைப் பெற்றுள்ளது, இது படத்திற்கு நிதி ரீதியாக மட்டுமல்ல, விளம்பரத்திற்கும் நிறைய உதவியாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வால்டர் திரைப்படம் சிபியின் தந்தை நடிப்பில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடிய அதிரடி போலீஸ் படம் வால்டர் வெற்றிவேல் படத்தை போல் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்.

வால்டர் படம் ஒரு திரில்லர் படம், குழந்தைகளை கடத்தி செல்லும் கும்பல் எதற்காக கடத்துகிறார்கள், இதன் பின்னணி என்ன என்பதை விறு விருப்பன திரில்லர் ஸ்டைலில் காண்பித்து உள்ளது படத்தின் ட்ரைலர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடராஜன் மற்றும் சமுத்திரக்கனி நடித்துள்ளனர், சிபிக்கு ஜோடியாக  ஷிரின் கச்சிவாலா நடித்திள்ளார். மேலும் ரித்விகா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

வால்டர் வெற்றிவேல் போல இருக்குமா சிபியின் வால்டர் திரைப்படம்?