பொழுதுபோக்கு

நடிகர் விஜயின் மாஸ்டர் பட சம்பளம் 80 கோடி ரூபாய், வரி செலுத்தியுள்ளார்

F மாஸ்டர் பட சம்பளம் 80 கோடி ரூபாய், வரி செலுத்தியுள்ளார்: இப்போது விஜய் தனது குடும்பத்தினருடன் விடுமுறை சென்று இருக்கிறார், மார்ச் 15 அன்று ஆடியோ...

By புருசோத்தமன் · ·1 min read


F மாஸ்டர் பட சம்பளம் 80 கோடி ரூபாய், வரி செலுத்தியுள்ளார்:
இப்போது விஜய் தனது குடும்பத்தினருடன் விடுமுறை சென்று இருக்கிறார், மார்ச் 15 அன்று ஆடியோ வெளியீட்டுக்காக வர இருக்கிறார். இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் ஐடி ரெய்டில் சிக்கியுள்ளதாக செய்திகள் வர தொடங்கின.

பனையூரில் மீண்டும் ஐடி ரெய்டு பற்றிய வதந்திகள் உண்மையானதா? பொதுவக ஐடி ரெய்டு முடிந்த பின் சம்பந்த பட்ட நபர்கள் வருமான வரி துறை அலுவலகத்திற்கு சென்று கணக்குகளை முடித்து வருவார்கள். மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை செய்யப்பட்ட சில இடங்களை சீல் வைப்பதும் உண்டு. இவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கும், அதை தான் நேற்று செய்ய வந்துள்ளனர்.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் பல ஆவணங்களை எடுத்தபின், பல கணக்குகளை நடிகர் விஜயிடம் அதிகாரப்பூர்வாமாக கேட்டு அறிந்தனர். இதில் குறிப்பிடும் செய்தி, விஜய் பிகில் படத்திற்க்காக வாங்கிய சம்பளம் 50 கோடி ரூபாய் மற்றும் தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் சம்பளம் 80 கோடி ரூபாய். கணக்கில் காட்டப்பட்டுள்ள இந்த சம்பள பணத்திற்கு வரிகளை நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் படம்நடிகர் விஜயின் சம்பளம்
View full article on தமிழ் செய்திகள்