தமிழ் சினிமாவில் நிலவும் பிரச்சனைகளை கூறிய டி . ராஜேந்திரன்
அசோக் (Author) Published Date : Oct 15, 2025 18:16 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரன் அவர்கள், தமிழ் சினிமாவில் நிலவும் தற்போதைய பிரச்சனைகள் குறித்துத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ, சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மலையாள சினிமாவில் லோகா சாப்டர் 1 போன்ற தரமான படங்களும், கன்னட சினிமாவில் காந்தாரா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களும் வெளியாகின்றன. ஆனால், தமிழ் சினிமாவில் ஏன் அந்த மாதிரி படங்கள் வரவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்ச் சினிமாவில் வெற்றிமாறன், நெல்சன், கௌதம் மேனன் போன்ற திறமையான இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தட்டிக்கொடுத்து, நல்ல கதைகளுக்கு முதலீடு செய்யத் தயாரிப்பாளர்கள்தான் யாரும் முன்வருவதில்லை. பெரிய பட்ஜெட்டில், பெரிய நடிகர்களை வைத்து மட்டுமே படம் பண்ண வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் படத்துக்கு பட்ஜெட் எவ்வளவு என்று பார்க்காதீர்கள், அந்தப் படத்தில் நல்ல சப்ஜெக்ட் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள், என்று ஆவேசமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.