பொழுதுபோக்கு

திட்டம் 2 திரைவிமர்சனம்: திரில்லர் படத்தில் புதிய முயற்சி

திட்டம் 2, இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சோனி லைவ் தளத்துல ரிலீஸான படம் தான் திட்டம் 2. இந்த படம் ஒரு திரில்லர் படம், படத்தோட...

By புருசோத்தமன் · ·1 min read

திட்டம் 2, இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சோனி லைவ் தளத்துல ரிலீஸான படம் தான் திட்டம் 2.

இந்த படம் ஒரு திரில்லர் படம், படத்தோட ஆரம்பத்துல ஒரு கொலை நடக்குது அந்தக் கொலையை துப்பறிந்து யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதுதான் கதை.

முதல் படுகொலை செய்யப்படுவது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நெருங்கிய தோழி, இரண்டாவது இன்னொரு கொலை நடக்குது அந்தப் பெண்ணுக்கும் இந்த முதல் கொலைக்கும் இருக்கிற சம்பந்தத்தை பார்க்கிறார்கள்.

முதல் கொலைக்கும் இரண்டாவது கொலைக்கும் இருக்கிற ஒரே சம்பந்தம், கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கும் கூட படிச்ச ஒரு நபர், இதை வைத்து கொலையாளி யாரென்று இண்டர்வல் பிளாக் கண்டுபிடிக்கிறார்கள்.

அதுக்கப்புறம் இருக்கிறது தான் இன்னும் அதிக சுவாரஸ்யம், விசாரணையில் இரண்டாவது கொலையை மட்டும் தான் செய்ததாகவும், முதல் கொலையை செய்ய முடியவில்லை என்று தெரிவிக்க, படத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசி வரைக்கும் கொலையாளியை கண்டுபிடிக்க போராடுகிறார், எப்படி அந்த கொலையாளியை கண்டுபிடித்து தன்னுடைய நெருங்கிய தோழியை கொன்றது யார்? எதற்காக? கடைசியாக கண்டுபிடிக்கிறாங்க.

இந்த படத்தை பொறுத்தவரைக்கும் கொலையாளி இவங்க தான், என்று நமக்கு தெரிந்தாலும், படத்தின் கிளைமாக்ஸ் பெரிய ஒரு டெட்விஸ்ட். தமிழ் சினிமாவில் இந்த மாதிரி ஒரு கதையை படமாக்கியது இல்லை, டைரக்டர் ஒரு நல்ல முயற்சியை எடுத்திருக்கிறார்.


View full article on தமிழ் செய்திகள்