இந்த கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு பல்வேறு முன்னணி ஓடிடி தளங்களில் சுவாரஸ்யமான திரைப்படங்களும், தொடர்களும் வரிசையாக வெளியாகின்றன.

டிசம்பர் 24-ம் தேதி முதல் ஓடிடி வெளியீடுகள் தொடங்குகின்றன. அன்று Zee5 தளத்தில் முனீஷ்காந்த் நடிப்பில் உருவான குடும்ப நகைச்சுவைத் திரைப்படமான மிடில் கிளாஸ் வெளியாகிறது. அதே நாளில், நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்த பேய்க் கதையான ரஜினி கேங், Prime Video தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஆக்ஷன் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு விருந்தாக, ராம் பொத்தினேனி நடித்த ஆந்திரா கிங் தாலுகா திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி Netflix தளத்தில் வெளியாகிறது.

வார இறுதி நாளான டிசம்பர் 26-ம் தேதி மிகப்பெரிய வெளியீடுகள் காத்திருக்கின்றன. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் Netflix தளத்தில் வெளியாகிறது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரின் இறுதி சீசனின் இரண்டாம் பாகமும் அன்றைய தினமே Netflix தளத்தில் வெளியாகிறது.