ads
பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
அசோக் (Author) Published Date : Sep 30, 2025 10:41 ISTபொழுதுபோக்கு
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தி ராஜா சாப் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பரவியுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது, தி ராஜா சாப் ஒரு பேய் படமாக உருவாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரபாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து சினிமா ரசிகர்களும் இப்படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.
இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். தி ராஜா சாப் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அதே சமயத்தில், நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் திரைக்கு வரவுள்ளன.
இந்த மூன்று படங்களின் ரிலீஸால், பாக்ஸ் ஆபிஸில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் பொங்கல் திருநாளுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.