Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் ஹீரோ மற்றும் தம்பி

இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் ஹீரோ மற்றும் தம்பி

இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் ஹீரோ மற்றும் தம்பி: இந்த வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளது. ஒன்று, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ஹீரோ திரைப்படம், மற்றொன்று கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகும் தம்பி படம். இவ்விரண்டு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

பாண்டியராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை வெற்றி படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் ஹீரோ. நம்ம வீட்டு பிள்ளை கிராமத்து கதைக்களம், அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. 

இந்த வாரம் வெளியாகும் ஹீரோ படம் நகர்புறத்தில் நடக்கும் சமூக முக்கியத்துவம் உள்ள படம். குழந்தையில் இருந்து சூப்பர் ஹீரோ கனவில் வாழும் ஒருவன், பெரியவனானதும் எவ்வாறு மாறுகிறான், சமுதாயத்திற்கு என்ன செய்கிறான் என்பதே கதை.

தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை படைத்த படம் கைதி, தொடர்ந்து அடுத்தப்படமாக வரவிற்கும் படம் தம்பி. கைதியின் வெற்றியால் தம்பி படமும் வெற்றியடைய வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது தம்பிக்காக காத்துக்கொண்டு இருக்கும் அக்காவாக ஜோதிகா, அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளனர். ஓடிப்போன தம்பியாக வரும் கார்த்தியை இருவரும் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள், கார்த்தி வந்த பின் நடக்கும் குழப்பங்களை வைத்து படம் செல்கிறது.

இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் ஹீரோ மற்றும் தம்பி