Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

தல 60: இளம் இயக்குனருக்கு தொடர் வாய்ப்பளிக்கும் அஜித்

தல 60

தல அஜித்த்தின் நேர் கொண்ட பார்வை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தல குறித்த செய்திகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு விஷ்ணு வர்தன் போன்ற இயக்குனர்கள் தலையை வைத்து இயக்க முன்னிலையில் உள்ள நிலையில் நேர் கொண்ட பார்வையை இயக்குக்கொண்டிருக்கும் வினோத் மீண்டும் அஜித்துடன் கூட்டணி சேர்வார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் தப்சீ பண்ணு நடித்து ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் பிங்க். இப்படம் அழுத்தமான சமூக கருத்தை பதிவு செய்து மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படமே தமிழில் தல அஜித் நடிப்பில் நேர் கொண்ட பார்வையாக தமிழ் ஆகி வருகிறது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமான வினோத் மீண்டும் அஜித்துடன் தன் சொந்த கதையில் இணையவுள்ளதாக செய்தி வேளியாகியுள்ளது.

போனி கப்பூர் தயாரித்து வெளிவரவிருக்கும் பிங்க் தமிழ் ரீமேக் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பல திறமை வாய்ந்த இளம் நடிகர்கள் நடிக்கின்றனர். ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பில் இதுபோன்ற கதைக்களத்தில் இளம் நடிகர்கள் இணைவது சமீப காலத்தில் இதுவே முதன்முறை எனது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வினோத் மீண்டும் அஜித்துடன் இணைந்து அடுத்த படத்திலும் வேலை செய்தால் தலையுடன் தொடர்ந்து படம் செய்த வெகுசில இயக்குனர் அந்தஸ்தை வினோத் பெறுவார். முன்னர் சரண், சிவா போன்ற இயக்குனர்கள் தல அஜித்துடன் தொடர் வெற்றிகளை கொடுத்தனர். வருகின்ற கூட்டணியும் வெற்றி கூட்டணியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

தல 60: இளம் இயக்குனருக்கு தொடர் வாய்ப்பளிக்கும் அஜித்