Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சூர்யாவின் என்.ஜி.கேவுக்கு ட்விட்டர் எமோஜி ரசிகர்கள் கோலாகலம்

சூர்யாவின் என்.ஜி.கே

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் என்.ஜி.கே. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது தென்னிந்தியாவில் மூன்றாவது படமாக இப்படத்திற்கு ட்விட்டரில் எமோஜி கிடைத்துள்ளது.

இதற்கு முன் மெர்சல் மற்றும் காலா போன்ற படங்களுக்கு ட்விட்டரில் ஹாஷ்டாக் எமோஜி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை சூர்யா ரசிகர் ரசிகைகள் சமூகவலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சூர்யா படம் வெளியாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிய நிலையில் என்ஜிகே படமும் பெரும் தாமதத்திற்கு பிறகு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். டீஸர் ட்ரைலர் மக்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் படம் பெரிய அளவில் வெளியாக காத்திருக்கிறது.

ட்விட்டர் எமோஜி படத்திற்கு இன்னும் கவனத்தை ஈர்த்த நிலையில் வரும் நாட்களில் படத்தின் விளம்பரம் சூடுபிடிக்கும் என தெரிகிறது. ரகுல் ப்ரீத் மற்றும் சாய் பல்லவி சூர்யாவுடன் முதல் முறையாகி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர் மற்றும் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு ஓர் அரசியல் படத்தில் நடிப்பதால் செல்வராகவன் எதிர்பார்ப்பு இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மே 31க்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ஜிகே! 

சூர்யாவின் என்.ஜி.கேவுக்கு ட்விட்டர் எமோஜி ரசிகர்கள் கோலாகலம்