Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

legends meet: கதாநாயகனும் வில்லனும் சந்தித்து கொண்ட தருணம்

ரஜினிகாந்த் - நெப்போலியன் சந்திப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் வெளியீடான பேட்டையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பில் உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகின்ற இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்த வருகின்றார். 2005 ஆம் ஆண்டு திகில் பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகிக்குப் பிறகு பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் சூப்பர்ஸ்டார் மற்றும் லேடி சூப்பர்ஸ்டாரின் கூட்டணி இரண்டாவது முறையாக இப்படத்தில் காணலாம். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பாரின் 2 வது கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர் ​​ஹாலிவுட் ஹீரோவை சந்தித்து  தனது ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் அவரது வரவிருக்கும் படத்திற்காக வழங்கி உள்ளார். ஹாலிவுட் நடிகர் வேறு யாருமில்லை 1993 ஆண்டு வெளியான எஜமான் படத்தின் வில்லன் நடிகர் நெப்போலியன். நெப்போலியன் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

எஜமான் சூப்பர்ஸ்டாரை கிராமத் தலைவராக காந்தவேலு வனவராயன் என்ற கதாபாத்திரத்திலும், நெப்போலியன் வில்லனாக வல்லவராயன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மீனா, ஐஸ்வர்யா, நம்பியார் மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

நெப்போலியன் தனது ஹாலிவுட் திரைப்படமான கிறிஸ்மஸ் கூப்பனுக்கு வாழ்த்துக்கள் பெறுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் போஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். மேலும் இருவரும் சந்தித்து எடுத்த கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.  கிறிஸ்மஸ் கூப்பனை டேனியல் க்நுட்சன் இயக்கியுள்ளார் மேலும் ஷீனா மோன்னின் நடித்துள்ளார்.

legends meet: கதாநாயகனும் வில்லனும் சந்தித்து கொண்ட தருணம்