வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படங்கள் வாடிவாசல் மற்றும் STR 49
ராம் குமார் (Author) Published Date : Sep 05, 2025 17:52 ISTபொழுதுபோக்கு
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் STR 49 படத்தின் ப்ரோமோ நேற்று வெளியானது. இந்த ப்ரோமோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ள நிலையில், வெற்றிமாறனின் அடுத்த படம் STR 49 தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்கேர்ள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இன்னும் பத்து நாட்களில் வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
நடிகர் சிம்பு மற்றும் நடிகர் சூர்யா இருவரின் திரை வாழ்க்கையிலும், வெற்றிமாறன் இயக்கும் STR 49 மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. சூர்யாவின் அடுத்த படமாக கருப்பு இருந்தாலும், ரசிகர்கள் வாடிவாசல் படத்திற்காக அதிக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.