ads

STR 49 படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4 வெளியாகிறது

STR 49 படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4 வெளியாகிறது

STR 49 படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4 வெளியாகிறது

நடிகர் சிலம்பரசன் (STR) ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 49 வது திரைப்படத்தின் (STR 49) புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ப்ரோமோ வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே இயக்குநர் வெற்றிமாறன், STR 49 திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, உங்கள் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காம்போவின் ப்ரோமோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம், ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வடசென்னை படத்தின் கதைக்களத்தை ஒட்டி, அதே காலகட்டத்தில் நடக்கும் வேறு ஒரு கதையாக இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கெனவே உறுதி செய்திருந்தார். இதன் காரணமாக, வடசென்னை படத்திற்கு இருந்த அதே எதிர்பார்ப்பு, சிம்புவின் STR 49 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

STR 49 படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4 வெளியாகிறது