ஏ.ஆர். முருகதாஸை தாக்கி பேசிய சல்மான் கான்
அசோக் (Author) Published Date : Oct 14, 2025 12:28 ISTபொழுதுபோக்கு
இந்தி நடிகர் சல்மான் கான், தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய முருகதாஸ், படம் வெற்றி பெறாததற்குக் காரணம் சல்மான் கான்தான். அவர் பெரும்பாலும் படப்பிடிப்புக்கு இரவில்தான் வருவார். அதனால் என்னால் சரியாகப் படமெடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் சல்மான் கான் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சல்மான் கான், முருகதாஸை குறிப்பிட்டு, நான் ஷூட்டிங்குக்கு லேட்டாக வந்ததால்தான் படம் வெற்றி பெறவில்லை என்று கூறுகிறார்கள். மதராஸி படத்தின் ஹீரோ காலையில் 6 மணிக்கெல்லாம் ஷூட்டிங்குக்கு வந்துவிடுவாராம். அதனால் அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டதாம் என்று கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
சல்மான் கானின் இந்தப் பேச்சு ஏ.ஆர். முருகதாஸைக் குறி வைத்துத் தாக்கும் விதத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய நடிகர் இப்படிப் பேசலாமா என்று ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.