Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சாஹோ தமிழ் டீஸர்: உலகத்தரத்தில் அசத்தும் டோலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டம்

சாஹோ தமிழ் டீஸர்

பாகுபலி நாயகம் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சாஹோ படத்தின் டீஸர் டோலிவுட்டின் அடுத்த பெரும் படைப்பாக கருதப்படுகிறது. சாஹோ தமிழ் டீஸர்வெளியான சில நேரத்தில் வெகுஜனதால் பார்க்கப்பட்டு வருகிறது.மேலும் நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு இந்த படத்தில் காலம் இறங்குவதால் இவரின் அகில இந்தியா மார்க்கெட், படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெகுநாட்களாக உருவாகி வருண் சாஹோ, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுவருகிறது. பட உருவாகும் விதம் குறித்து பெரிதாக பேசப்பட்டு வந்தநிலையில், டீசரை பார்க்கும்போது அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்துள்ளது எனவே கூறலாம். வெளிநாடுகளில் முழுவதுமாக எடுக்கப்பட்டிருக்கும் சாஹோ கிட்டத்தட்ட வெளிநாட்டு படம் போலவே தெரிகிறது.

பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் மற்றும் பலதரப்பட்ட நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார். தெலுங்கில் ரன் ராஜா ரன் என்ற பொழுதுபோக்கு படம் மூலம் அறிமுகமான இவர் பெரும் இடைவேளைக்கு பிறகு இந்த பெரிய படத்தில் இணைந்துள்ளார். ரசிகர்களின் பல நாள் காத்திருப்பை இந்த டீஸர் பூர்த்தி செய்துள்ளது சமூகவலைத்தளங்களில் காணமுடிகிறது.

இதற்கு முன்னர் வெளியான டீஸர் வீடியோவில் பிரபாஸ் ரத்தக்கறையுடன் அமர்ந்து பார்ப்பது போல ஒரு சிறிய காட்சி மட்டுமே காணப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் முழு நீல டீஸர் படத்தின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்டியுள்ளது. சண்டை காட்சிகள் மற்றும் கேமரா வேலைகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்து கண்களுக்கு விருந்தாக காணப்படுகிறது. ஆகஸ்ட்டில் சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ள சாஹோ இந்தியா அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹோ தமிழ் டீஸர்: உலகத்தரத்தில் அசத்தும் டோலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டம்