பாலிவுட்டின் நடிகர் ரன்வீர் சிங்கின் சமீபத்திய திரைப்படமான 'துரந்தர் 2: த ரிவென்ஜ்' பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் ஆதித்ய தாரின் இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு குறித்து திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இருப்பினும், ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனேயிடமிருந்து எந்தவித பாராட்டுப் பதிவும் இதுவரை வரவில்லை என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் மதிய உணவிற்காக வெளியே சென்ற ரன்வீர் சிங், ரெஸ்டாரன்டிலிருந்து வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரை பார்த்து உற்சாகமாக கூச்சலிட்டு வரவேற்றனர்.
இதைக் கண்ட ரன்வீர் சிங், தனது வழக்கமான உற்சாகமான பாணியில் ரசிகர்களை நோக்கி கை அசைத்து வாழ்த்தினார். அவரது இந்த செயலைக் கண்ட ரசிகர்கள் இன்னும் அதிக உற்சாகத்துடன் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நேரத்தில் தீபிகா படுகோனே தனது கணவரை நோக்கி பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டிருந்ததாக அங்கிருந்த நபர்கள் தெரிவித்தனர். ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற ரன்வீரை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'துரந்தர் 2: த ரிவென்ஜ்' படம் வெளியான முதல் வாரத்திலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வசூலில் துரந்தர் 2 புதிய சாதனை படைத்துள்ள இந்தப் படம் , விமர்சகர்களிடமிருந்தும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
ரன்வீர் சிங்கின் இந்த வெற்றி, அவரது நடிப்பில் ஒரு முக்கியமான மைல்கல் படமாக என்று கருதப்படுகிறது. குறிப்பாக, ஆக்ஷன் வகை படங்களில் அவரது திறமையை இந்தப் படம் மேலும் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், தீபிகா படுகோனே விரைவில் ரன்வீரின் வெற்றி குறித்து சமூக வலைதளங்களில் தனது பதிவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடியின் ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

