ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர் . சி இயக்குகிறாரா ?
அசோக் (Author) Published Date : Oct 16, 2025 10:38 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு அவர் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தப் படத்திற்கான இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்றும், ஒருவேளை இயக்குநர் முடிவானாலும், படத்தின் கதை மிகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பதால், இந்தப் படம் தொடங்குவதற்குச் சற்றுக் காலதாமதம் ஆகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அதற்கு முன்னர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்கப் போவதாகவும் புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது, இருப்பினும், இந்தச் செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சுந்தர். சி கடைசியாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இந்த இருவரும் இணைந்தால், அந்தப் படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.