ads
சினிமாவிலிருந்து ஓய்வு பெரும் ரஜினிகாந்த்
அசோக் (Author) Published Date : Oct 30, 2025 10:43 ISTபொழுதுபோக்கு
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப்போவது உறுதியான செய்தி. இந்த மிக முக்கியமான திரைப்படத்தை இயக்குவது யார் என்ற கேள்விதான் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது.
முன்னதாக, ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லேட்டஸ்ட் தகவல்களின்படி, ஜெயிலர் வெற்றியைத் தந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியிடம் கூறிய ஒன்லைன் கதை பிடித்துப் போனதால், அவர் ரஜினி மற்றும் கமல் இணையும் படத்தை இயக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு நெல்சனுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2027 ல் தான் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரஜினி மற்றும் கமல் கூட்டணி குறித்த செய்திகளில் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதாவது, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படமே நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கக்கூடும் என்றொரு செய்தி வலம் வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த செய்தி ரஜினி ரசிகர்களின் மனதை கலங்கச் செய்துள்ளது.
ரஜினி மற்றும் கமல் இருவரும் மீண்டும் திரையில் இணைவது இந்திய சினிமாவுக்கே பெருமை. குறிப்பாக, இயக்குநர் நெல்சன் போன்ற இன்றைய தலைமுறை இயக்குநரின் கைகளில் இந்தக் கூட்டணி உருவானால், அது நிச்சயம் ஒரு மாஸ் எண்டர்டெய்னராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இரு பெரும் ஆளுமைகளை ஒரே திரையில் பார்க்கப் போகும் அந்தப் பொன்னான நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படமே ரஜினியின் கடைசிப் படமாக இருக்காது என நம்புவோம்!