முன்னணி ஹீரோக்களுக்கு இனி சம்பளம் இல்லை?


தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் (Producers' Council) ஒரு அதிரடியான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு இனி ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் மொத்த லாபத்தில் ஒரு பங்கை (Profit Share) அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் பெரிய முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு, படம் ஹிட்டானாலும், ஃபிளாப் ஆனாலும், முன்னணி நடிகர்களுக்குக் கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரும் சுமையாக இருந்தது. இனிமேல், படத்தின் வெற்றிக்கு ஏற்ப நடிகர்களுக்கும் லாபம் கிடைக்கும் வகையில் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

புதிய விதிகளின்படி, ஒரு முன்னணி நடிகருக்கு ஒரு படத்துக்கான சம்பளம் ரூ. 100 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டால், அதில் சுமார் 60% (ரூ. 60 கோடி) தொகையை அட்வான்ஸாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையானது படம் வெளியாகி, கிடைக்கும் லாபத்தில் இருந்து மட்டுமே வழங்கப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சமீபகாலமாக, ரஜினி, கமல், அஜித்குமார் மற்றும் விஜய் போன்ற டாப் ஸ்டார்கள், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் பல படங்களைச் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, தமிழ் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், நடிகர்களின் சம்பளத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த லாபப் பகிர்வு ஒப்பந்தம் உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.

Share on:

Latest Post