பொழுதுபோக்கு

பொன்மகள் வந்தாள் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

ஒரு நல்ல கதையை உருவாக்க இயக்குனர் கடுமையான உழைப்பை செலுத்தும்போது, தமிழ் ராக்கர்ஸ் முழு கடின உழைப்பையும் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தில் படத்தை ஆன்லைனில்...

By புருசோத்தமன் · ·1 min read

ஒரு நல்ல கதையை உருவாக்க இயக்குனர் கடுமையான உழைப்பை செலுத்தும்போது, தமிழ் ராக்கர்ஸ் முழு கடின உழைப்பையும் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தில் படத்தை ஆன்லைனில் கசியவிடுவதன் மூலம் இயக்குனர் மற்றும் பட குழுவினரின் உழைப்பை வீணடிக்கிறது.

கொரோனா ஊரடங்கால் மூடியுள்ள திரையரங்கில் எந்த ஒரு படமும் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்று உணர்ந்த அமேசான் ப்ரைம் நிறுவனம், எந்த படம் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளதோ அவர்களை நாடி நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம்தான் பொன்மகள் வந்தாள்.

பொதுவாக ஒரு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன பின், குறைந்தது 30 நாட்களுக்கு பின் தயாரிப்பாளர்கள் டிவி மற்றும் அமேசான் ப்ரைம் மற்றும் நெட் ப்ளிக்ஸ் போன்ற தளங்களுக்கு விற்பார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு மற்றும் அமேசான் ப்ரைம் மற்றும் நெட் ப்ளிக்ஸ் போன்ற இடங்களில் விற்கும் பொது ஒரு கணிசமான லாபம் கிடைக்கும்.

இது மட்டுமில்லாமல், இவர்கள் இவ்வாறு செய்வதால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணைய தளங்களில் தமிழ் படங்கள் கசிந்தாலும் மக்களுக்கு ஒரிஜினல் பிரிண்ட்கள் பார்ப்பதற்கு குறைந்தது 30 நாட்கள் ஆகும். ஆனால் இன்று நடந்தது வேறு கதை, ஜோதிகா நடிப்பில், இவரின் கணவர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆன ஒரு சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ், பொன்மகள் வந்தாள் முழு திரைப்படத்தை ஆன்லைனில் கசியவிட்டனர்.

இதில் கொடுமை என்னவென்றால், 30 நாட்களுக்கு பிறகு வெளியாகும் உயர்தர பிரிண்ட்கள் சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் வெளியீட்டது தான் பெரிய அதிர்ச்சி.

சமூக திரில்லர் திரைப்படமான பொன்மகள் வந்தாள், வெளியீட்டிற்கு முன்னர் மிகவும் சர்ச்சை எதிர்கொண்ட திரைப்படம். மே மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டு பின் சில பிரச்சனைகளால் இன்று மே 29ஆம் தேதி திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் ஒரு நல்ல படமாக மக்கள் மனதில் இன்று இடம் பிடித்துள்ளது என்றே கூறலாம், ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது மற்றும், இதில் நடித்துள்ள மற்ற நடிகர்களை பற்றி கூற தேவையில்லை, அந்த அளவிற்க்கு இயக்குனர் அசத்தியுள்ளார்.

இது போன்ற நல்ல படங்களை மக்கள் பெரிய திரையில் பார்ப்பதை விரும்புவார்கள், இன்று நிலவும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால், ஒரே குடும்பமாக இருக்கும் தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் பூசலால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வேலையை சுலபமாக்கி கொண்டுள்ளது.

நடிகர் சூரிய தரப்பில் அமேசான் ப்ரைம் ரிலீஸ் விளக்கத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மாற்றி கொள்ளவேண்டும் என்பது மற்றும் படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைப்பதில்லை.

தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் அதி நவீன தொழில்நுட்பத்தில் திரையரங்கை மேம்படுத்திக்கொண்டே செல்கிறோம். 3டி தொழில் நுட்பத்திலிருந்து உலகின் முன்னணி இசை தொழில்நுட்பம் வரை செயல்பாட்டில் வைத்துள்ளோம்.

இவ்வாறு இருக்கையில், கொரோனா தாக்கத்தை காரணம் காட்டி படங்களை மாற்று பாதையில் ரிலீஸ் செய்து அதற்கு தொழில்நுட்பத்தை கூறுவது சரியல்ல மற்றும் தங்கள் தரப்பில் உள்ள சில நியாமான விளக்கங்களை கொடுத்தனர்.

அமேசான் ப்ரைமாக இருந்தாலும், திரையரங்காக இருந்தாலும் மக்கள் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் படங்களை பார்ப்பது நல்லது.


How to watch Ponmagal Vandhal Movie in Amazon PrimeWatch Ponmagal Vandhal Full movie in Amazon Primeதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020Ponmagal Vandhal Full Movie Movie Leaked in Tamilrockers
View full article on தமிழ் செய்திகள்