பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு
அசோக் (Author) Published Date : Nov 05, 2025 12:05 ISTபொழுதுபோக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ நேற்று (நவம்பர் 4) வெளியானது.
இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பராசக்தி படத்தின் முதல் முழுப் பாடலும் நாளை மறுநாள் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களுக்கு, பராசக்தி படம் இசையமைப்பாளராக இருக்கும் 100 வது திரைப்படம் ஆகும். இதன் காரணமாகவே, இந்தப் படத்தின் இசை மிகச் சிறப்பாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.