பராசக்தி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு

Sivakarthikeyan Dancing With Sreeleela
Sivakarthikeyan Dancing With Sreeleela

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், அவரே பாடியுள்ள ரத்னமாலா என்ற இப்பாடல், ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான அடி அலையே பாடலின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது.

ஜி.வி. பிரகாஷின் 100 வது படமாக இது அமைவதால், இந்த ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடி அலையே பாடல் போலவே ரத்னமாலாவும் சமூக ஊடகங்களில் ஹிட் அடிக்குமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இரண்டு பாடல்களும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது படக்குழுவினர் டப்பிங், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விரைவில் படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்ப்புக்குரிய இந்தத் திரைப்படம், வரும் ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest Post