பொழுதுபோக்கு

96 பட நடிகையின் அதிரடியான பதிலடி

96 திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன், சமீபத்தில் தனது வரவிருக்கும் படமான அதர்ஸ் -இன் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரிடம் கோபமாகப்...

By அசோக் · ·1 min read

96 திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன், சமீபத்தில் தனது வரவிருக்கும் படமான அதர்ஸ் -இன் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரிடம் கோபமாகப் பேசிய விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சர்ச்சைக்குரிய கேள்வி என்ன?

படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் ஒரு யூடியூபர், பாடல் காட்சியில் கதாநாயகி கௌரி கிஷனைத் தூக்கிச் சுற்றி வருகிறீர்களே? அவர் ரொம்ப வெயிட்டா (உடல் எடையுடன்) இருந்தாரா?, அவரது உடல் எடை என்ன என்று கேட்டதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.

கௌரி கிஷனின் கோபமான பதிலடி

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்த கௌரி கிஷன், உடனடியாக செய்தியாளரை நோக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் எடையைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்? இது முட்டாள்தனமான கேள்வி, திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் குறித்தோ, நடிப்புக் குறித்தோ எந்தக் கேள்வியும் கேட்காமல், எனது உடல் எடை எவ்வளவு என்று ஏன் கேட்கிறீர்கள்? ஒரு பெண்ணிடம் இப்படித்தான் பேசுவீர்களா? இது உருவ கேலி (Body Shaming) என கோவமாக பேசியுள்ளார்.

கௌரி கிஷனின் இந்தத் துணிச்சலான பதிலுக்குப் பல திரைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் கவின், கௌரி கிஷனின் நிலைப்பாடு சரியானது என்றும், அவர் பேசியது காலத்தின் தேவை என்றும் மறைமுகமாகப் பாராட்டியுள்ளார்.

பாடகி சின்மயி, கௌரி மிக அருமையாகச் செயல்பட்டார். ஒரு மரியாதை இல்லாத கேள்வியை எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது பலர் கத்துவார்கள். இவ்வளவு இளம் வயதில் உறுதியாக நின்று பதிலளித்த கௌரியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஆண் நடிகர்களிடம் யாரும் அவர்களின் எடையைக் கேட்பதில்லை, என்று பதிவிட்டுள்ளார்.


View full article on தமிழ் செய்திகள்