Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் வெளி வரவிருக்கும் புதிய தமிழ் படங்கள்

புதிய படங்கள்

2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பல படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பேட்ட, காஞ்சனா 3, என்ஜிகே போன்ற படங்கள் வெளியாகி இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகியது. இரண்டாம் பாதியில் வெளியாகவிற்கும் படங்களை பற்றிய விவரங்கள் இதோ:

நேர்கொண்ட பார்வை 

ஹிந்தி திரைத்துறையில் பெரும் வரவேற்பை பெற்ற படம் பிங்க். இப்படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தை ஏற்று தனது பணியில் நடித்து படத்துக்கான எதிர்பார்ப்புகளை உருவாக்கியதை ட்ரைலர் மூலம் அறியலாம். இப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி ஐயர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், இப்படத்தின் டிரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்ப்பினால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது.  

கைதி 

இந்த ஆண்டின் நீண்ட எதிர்பார்ப்புகளை உடைய படமாக உள்ளது. தீரன் அதிகாரத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு நம்பிக்கை தரும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கதாநாயகி இல்லாத படமாக இருக்கும் என பட வட்டாரம் மூலம் அறியப்படுகின்றது. இப்படம் அடுத்த மாதம் 18 அன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர். பட வெளியீட்டு தேதி நெருங்குவதால்  செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிகின்றது. 

காப்பான்

சூர்யாவின் சமீபத்திய வெளியீடுகளான டி.எஸ்.கே மற்றும் என்.ஜி.கே பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, ​​கே.வி. ஆனந்த் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் அடுத்த வெளியீடாக  காப்பன் வெளிவர தயாராக உள்ளது. புது ஜோடிகளான ஷயிஷா, ஆர்யா இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் மோகன்லால், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் 4 வேடத்தில் சூர்யா வருவதை ட்ரைலர் மூலம் அறியலாம். ஆக்சன் என்டர்டெய்னராக உள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தீர்க்கும் வகையில் ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட உள்ளது. 

அசுரன் 

கோடி படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் நடிகர் தனுஷ் மரித்தேவன், காளி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் இணைந்துள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷ் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் நடிகை சினேகா நடித்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட உள்ளது.

பிகில்

இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதியின் படம் இவ்வருடத்தின் வெளியீடாக உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இப்படத்தில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், பயிற்சியாளராகவும் நடித்துள்ளார். நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கதிர், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு மற்றும் இந்தூஜா ஆகியோர் இப்படத்தில்   குறிப்பிடத்தக்க வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. கடந்த ஆண்டு சர்க்கார் படம் தீபாவளியன்று வெளியானது மற்றும் அந்த ஆண்டின் சிறந்த வசூல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

சாஹோ

பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கு பிறகு நீண்ட காலம் நடிகர் பிரபாஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சஹோ. ஹிந்தி நடிகை ஷர்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜாக்கி ஷெரிப் வில்லனாக நடித்துள்ளார். ஆக்ஷன் படமாக எதிர்பார்க்கப்படும் சஹோ அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் வெளி வரவிருக்கும் புதிய தமிழ் படங்கள்