நாயகன் திரைப்படம் மீண்டும் திரையரங்கில்
அசோக் (Author) Published Date : Nov 04, 2025 14:46 ISTபொழுதுபோக்கு
உலக நாயகன் கமல் ஹாசன் பிறந்தநாளை (நவம்பர் 7) முன்னிட்டு, ரசிகர்களுக்குத் திரையுலகில் இரட்டை விருந்து காத்திருக்கிறது. அவரது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக, இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
கமல் ஹாசன் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மற்றும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாயகன் திரைப்படம், அவரது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், கமல் ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அன்று, அவர் தற்போது நடித்து வரும் படங்களின் ஒன்றான KH 237 குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. படக்குழுவினர் இந்தப் படம் குறித்து என்ன அப்டேட்டை வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எழுந்துள்ளது.
மொத்தத்தில், நவம்பர் 6 ஆம் தேதி நாயகன் ரீ ரிலீஸ் , மற்றும் நவம்பர் 7 ஆம் தேதி KH 237 படத்தின் முக்கிய அறிவிப்பு என கமல் ஹாசனின் பிறந்தநாள் வாரத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் துவங்கியுள்ளனர்.