Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

இணையத்தில் கசிந்தது மான்ஸ்டர், தமிழ்ராக்கர்ஸ் சித்து விளையாட்டு

மான்ஸ்டர்

முன்பெல்லாம் புதிய தமிழ் திரைப்படங்கள் திரையரங்கத்தில் வெளியாகி அடுத்தநாள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிவிடும். இப்போதெல்லாம் திரையரங்கத்தில் வெளியாகும் பொழுதே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் திரைப்படங்கள் கசிகிறது. இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால் தமிழகத்தில் வெளியாகும் முன்பே வெளிநாடுகளில் சில படங்கள் வெளியாகிறது, அங்கே தணிக்கைக்குழுவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே படத்தை போட்டு காண்பிக்க வேண்டும். அந்த நேரங்களில் தமிழ் படங்களை திருடிவிடுகின்றனர் சிலர்.

திரைப்படங்களை சுடுவதில் பேர்போன இந்த தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த மான்ஸ்டர் படத்தையும் விட்டுவைக்கவில்லை. படம் வெளியான சில மணி நேரங்களில் முழு படமும் மூன்று வீடியோ தரத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் திரு.எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடிப்பில் முதல் முறை U சான்றிதழ் பெற்ற படம் மான்ஸ்டர் திரைப்படம். இந்த படம் மக்கள் குடும்பங்களுடன் சேர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான படம் என்று பெயர் வணகியுள்ள இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இருவரது நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்திற்கு போட்டியாக வெளியாகி உள்ளது.

இணையத்தில் மான்ஸ்டர் படம் வெளியாகி விட்டதனால் படத்தின் வியாபாரம் சற்று கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எலி தொல்லையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களை அதிகம் பயன்படுத்தாமல் நிஜ எலியை நடிக்கவைத்துள்ளனர் படக்குழுவினர். நிஜ எலிக்கு ஒருவர் டப்பிங் பேசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் ஹீரோவிற்கு நிகராக எலியை சித்தரித்துள்ளனர். படத்தில் புத்திசாலி எலி செய்யும் காமெடி சேட்டைகளை வெகுவாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் படத்தில்  லைஞர்களின் உழைப்பு இப்படி தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களால் சூறையாடப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. சினிமா கலைஞர்களின் உழைப்பை மதித்து படத்தை திரையரங்கங்களில் கண்டுகளிக்குமாறு ரசிகர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இணையத்தில் கசிந்தது மான்ஸ்டர், தமிழ்ராக்கர்ஸ் சித்து விளையாட்டு