Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

ரிலீஸான சிலமணிநேரங்களில் இணையத்தில் லீக்கானது மகேஷ் பாபுவின் "மகரிஷி"

இணையத்தில் லீக்கானது மகேஷ் பாபுவின் மகரிஷி

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் திரு.மகேஷ் பாபு அவர்களது நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது "மகரிஷி" எனும் புதிய திரைப்படம். மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தனர், மகேஷ் பாபு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை "மகரிஷி" படம் பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார், நடிகர் அல்லரி நரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக நடிகர் ஜகபதி பாபு நடித்துள்ளார். இசையமைப்பளார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர்களான தில் ராஜு, அஷ்வினி தத் மற்றும் பிரசாத் வீரா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் "தோழா" என்ற பெயரிலும் தெலுங்கில் "ஒப்பிரி" என்ற பெயரிலும் வெளியானது ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். நடிகர் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த இந்த படம் இரண்டு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா மற்றும் அனுஷ்கா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கிய வம்சி என்பவர் தான் மகேஷ் பாபு நடித்திருக்கும் "மகரிஷி" படத்தையும் இயக்கியுள்ளார்.

படம் குறித்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தது, திரையில் வெளியான "மகரிஷி" படம் சில மணி நேரங்களில் "தமிழ் ராக்கர்ஸ்" எனும் இணையதளத்தில் படத்தின் ஹைச்-டி பிரின்ட் வெளியானதற்காக தான். மகரிஷி படம் மட்டும் அல்ல இன்னும் பல புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக அந்த இணையத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவின் ரசிகர்களை தவிர மற்ற சினிமா ரசிகர்களை மகரிஷி படம் ஈர்க்க தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. நடிகர் மகேஷ் பாபுவின் பக்கா கமர்ஷியல் சூறாவளியாக இந்த படம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது முந்தைய படமான "பரத் எனும் நான்" இந்த "மகரிஷி" படத்தை விட சூப்பராக இருந்தது என்றும் சிலர் வலைத்தளங்களில்  கருத்து கூறி வருகின்றனர். 

படமும் இணையத்தில்  வெளியானதால் வசூல் ரீதியாக இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாது என்றும் சிலர் கருத்து கூறி  வருகின்றனர். எது எப்படியோ ஒரு படம் வெளியான இரண்டே நாட்களில் அதன் வெற்றி தோல்விகளை பற்றி விவாதிப்பது சரியல்ல. இந்த வரத்தின் இறுதியில் தான் படம் உண்மையில் வென்றதா அல்லது தோற்றதா என்று தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம், இணையத்தில் அல்ல திரையரங்கங்களில்.

ரிலீஸான சிலமணிநேரங்களில் இணையத்தில் லீக்கானது மகேஷ் பாபுவின் "மகரிஷி"