ads

மதராஸி படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

மதராஸி படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

மதராஸி படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம், தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனைகள் படைத்து வருகிறது. படம் வெளியானது முதல், அதற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து, அவரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

படம் ரொம்ப நல்லா இருக்கு, உங்க நடிப்பும், ஆக்‌ஷனும் சூப்பர். நீங்க ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக, சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், இப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அதில் இடம்பெற்றிருக்கும் அதிரடி சண்டைக் காட்சிகள்தான் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சண்டைப் பயிற்சியாளர்களின் உழைப்பு, படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளதாகவும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

மதராஸி படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்