மாரீசன் திரைப்படம் ஆகஸ்ட் 22 -ம் தேதி OTT - யில் வெளியாகிறது
ராம் குமார் (Author) Published Date : Aug 18, 2025 16:24 ISTபொழுதுபோக்கு
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு நடித்த திரைப்படம் மாரீசன். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 22, 2025 அன்று ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்(Netflix) -இல் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியான மாரீசன், நடிகர் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்துடன் ஒரே நாளில் மோதியது. இதன் காரணமாக மாரீசன் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறவிட்டது.
படத்தின் கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இதில் நடித்த ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு ஆகியோரின் நடிப்பு பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு சிறப்பான இசையமைப்பை வழங்கியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.