லோகா சாப்டர் 1 படத்தின் பட்ஜெட் 30 கோடி ஆனால் வசூல் 100 கோடி
ராம் குமார் (Author) Published Date : Sep 04, 2025 15:26 ISTபொழுதுபோக்கு
இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய மலையாளப் படம், லோகா சாப்டர் 1. பிரமாண்டமான ஆக்க்ஷன் காட்சிகளுடன், ரசிகர்களுக்கு ஒரு புதிய சூப்பர் ஹீரோ அனுபவத்தை இந்தப் படம் வழங்கியுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லன் கஃபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சினிமா வட்டாரத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு, ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவு ஒரு முக்கிய காரணம்.
லோகா சாப்டர் 1 படத்தைப் பார்த்த ரசிகர்கள், படத்தில் எந்த ஒரு குறையும் இல்லை என்றும், ஹாலிவுட் தரத்திற்கு இணையாக படமாக்கப்பட்டுள்ளது என்றும் புகழ்ந்து வருகின்றனர். இதனால், இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் சிறப்பு தோற்றங்கள். இந்த இருவரின் வருகையும், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி, இந்தப் படத்தின் வெற்றியை இன்னும் அதிகரித்துள்ளது.